tamilnadu

‘மோடி திரைத்துறை சென்றிருந்தால் நல்ல நடிகராகியிருப்பார்’

கரூர், ஏப்.9-

கரூர் மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்திங்கள்கிழமை இரவு கரூர் வெங்கமேட்டில் திறந்த வாகனத்தில் வாக்குச்சேகரித்து பேசுகையில், பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, நான்ரயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கியவன், எனவே சாமானியர்களின் வலிகள் என்ன என்பது அறிந்து ஆட்சி நடத்துவேன் என்று சொன்னார். அப்போது அவர் அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்குவேன் என வாக்குறுதி அளித்தார். அதில்ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றினாரா? இப்போது ராமர் கோவிலைகட்டுவேன் என்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது திரைப்படத்துறைக்கு மோடி சென்றிருந்தால் ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை தட்டிச் சென்றிருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது. வாழை மரத்துக்கு முட்டு கொடுத்து வைப்பது போல் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்க மோடி முட்டு கொடுத்து நிற்கிறார். இதனால் தான் நீட் தேர்வில் விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போதும் கூட அதனை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எடப்பாடியால் முடியவில்லை. இதன் விளைவு தமிழக ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பு எட்டா கனியாகி விட்டது. இதே போல் காவிரி மேலாண்மைஆணையத்தினை நீண்ட போராட் டத்திற்கு பிறகு அமைத்த போதும் கூட அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்கப்பட்டாரா? மாறாக தற்காலிகமாக பொறுப்பாளர்கள் தான் நியமிக்கப்பட்டனர். எனவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் என்றால் இந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.பிரச்சாரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்தினம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

;