tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் ஜி.ரத்னவேலுவுக்கு வயது 86

கரூர், ஜன.1-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட திருச்சி மாவட்டச் செயலாளராகவும், மாநிலக் குழு உறுப்பினராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும்,   தொழிற்சங் கத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் பணி யாற்றியுள்ள மூத்த தோழர் ஜி.ரத்தினவேலு-வின்(86) பிறந்தநாள் ஜன.1 அன்று கொண்டாடப்பட்டது. அவருக்கு வாழ்த்து தெரிவித்து கரூர் நகரக் குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிபிஎம்  கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம், சிஐடியு மாவட்டச் செயலாளர்  சி.முருகேசன், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்க  அகில இந்திய பொதுச் செயலாளர்  ஐ.வெங்கடே சன், தபால் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜெயராஜ், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் ரத்னமாலா, மாவட்டச் செயலாளர் சாந்தி, மாவட்டப் பொருளாளர் கலா உள்ளிட்டோர்  கலந்துகொண்டு நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

;