கரூர், மே 9- கொரோனா பாதிப்பால் வீடுகளில் முடங்கியுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவியும், உணவுப் பொருட்களும் வழங்காமல் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக செயல்படுவதை கண்டித்தும், அரசு மதுபான கடையை திறந்துள்ளதை கண்டித்தும், உடனடியாக அரசு மதுபான கடைகளை மூட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர், குளித்தலை ஒன்றியக் குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் ஒன்றியம் கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் புகளூரில் உள்ள ஒன்றிய குழு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பூரணம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் அ.காதர்பாட்சா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடராஜன், ரவி, ஈஸ்வரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குளித்தலை ஒன்றியம் கட்சியின் குளித்தலை ஒன்றியம் கருங்களாப்பள்ளி கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு கண்டன உரையாற்றினார். கோமதி, மாரிமுத்து, போதும்பொண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் குளித்தலை நகரத்தில் உள்ள 9-வது வார்டு கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ரத்தினவேலு தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் உரையாற்றினார். தவசு, தங்கமணி கலந்து கொண்டனர். வை.புதூர் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகரன் கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் சத்யபிரியா, கிளை பாலசுப்பிரமணியன், நாகராஜன், சசிகுமார், கலா கலந்து கொண்டனர். நெய்தலூர் காலனி கிளை சார்பில் கிளைச் செயலாளர் இராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன் உரையாற்றினார்.
மாசி, பிச்சை கலந்து கொண்டனர். வையாபுரி கிளை சார்பில் கிளை செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. அங்கம்மாள், மகாமுணி, பரத், ராஜசேகர், மணியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ்நங்கவரம் கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கார்த்தி, கந்தசாமி, ராஜேஸ்வரி கலந்து கொண்டனர். குளித்தலை நகரம் 23-வது வார்டில் கிளைச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். கார்த்தி, லட்சுமி, செல்வி, வள்ளி, தீபா, அமுதவல்லி கலந்து கொண்டனர். குறிச்சி கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மகாமுனி, கார்த்தி, சித்தராசு கலந்து கொண்டனர்.