tamilnadu

img

சிறந்த தமிழ்ப் பணியைப் பாராட்டி விருது வழங்கல்

கரூர், மார்ச் 5- கரூர் பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் சர்வதேச அளவில் தமிழுக்கும், தமிழ் சமூ கத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஆற்றி வரும் சிறந்த தமிழ்ப் பணியைப் பாராட்டி ‘போற்றுதலுக்குரிய ஆசிரியர் விருது’ கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதியன்று ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி சார்பில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்வில் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் அறிவியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி நீலகண்டப்ரியா அம்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  திருவள்ளுவர் மாணவர் இளைஞர் பேரியக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக புதுதில்லியில் இந்திய  பாராளுமன்ற வளாகத்தில் நடை பெற்ற ‘பாராளுமன்றத்தில் திருக் குறள்’ நிகழ்வில் முக்கிய பணியாற்றியும், ஹரித்வார் நகரில் கங்கை கரை யில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவியதிலும் முக்கிய பங்கு பெற்றமைக்காகவும், தமிழ்மொழியின் முதல் எழுத்து வடிவமாகிய ‘தமிழி’ பயிற்சி வகுப்புகளை நடத்தி லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க பணியாற்றி வருவதற்கும், திருக்குறள் உள்ளிட்ட 36 சங்க இலக்கிய நூல்களை ‘தமிழி’ எழுத்து வடிவத்தில் மீள் ஆவணப்படுத்தி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்தது உள்ளிட்டவைக்காக விருது வழங்கப்பட்டது. ‘போற்றுதலுக்குரிய ஆசிரியராக விருது பெற்ற முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியனை பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், எம்.குமாரசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தி, துணை முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.