tamilnadu

img

மோதல் போக்கு இல்லாமல் நிறைவடைந்த ரக்பி உலகக்கோப்பை

முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்ற விளையாட்டான ரக்பி விளையாட்டின் 9-வது உலகக்கோப்பை தொடர் ஜப்பான் நாட்டில் நடைபெற்றது.  ஆசியக் கண்டத்தில் அவ்வளவாகப் பிரபலமில்லாத இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பொதுவாக ரக்பி உலகக்கோப்பை தொடரில் மோதல் போக்கு அதிகம் உருவாகும். சண்டை, காயம் போன்ற பிரச்சனைகளால் ரத்தம் மைதானத்தில்  கிடப்பது சகஜமான விஷயம் தான். 

இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றதால் காயங்கள் சற்று குறைந்துள்ளது. வீடியோ நடுவர் முறையும் இருந்ததால் வீரர்கள் பொறுப்புடன் விளையாடினார்கள். வேல்ஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பிரான்ஸ்  நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்குக் காது, தலை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.       

இந்தியாவில் ரக்பி உண்டா? 

கபடி விளையாட்டின் இனத்தைப் போன்று இருக்கும் ரக்பி விளையாட்டு போட்டிக்கு இந்தியாவில் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் கிடையாது. இந்திய   ரக்பி அணி சர்வதேச தரவரிசையில் பின்தங்கிய பட்டியலில் பயணிக் கிறது. எனினும் ஆசிய அளவில் ஓரளவு வெற்றியை குவித்து வருகிறது. இந்திய இளைஞர்களிடம் போதியளவு விழிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில் ரக்பி விளையாட்டு அச்சாணி இல்லாத சக்கரம் போலத் தள்ளாடி வருகிறது.