tamilnadu

img

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா

நாகர்கோவில், மார்ச் 5- கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா கல்குறிச்சி புனித வள னார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி தாளாளர் பெரிங்டன் தலைமை வகித்தார். உதவி பங்கு பணி யாளர் கம்மிலஸ் தேசிய கொடியேற்றி னார். உடற்கல்வி ஆசிரியை வேபின் விபிலா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கனகராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். மாணவிகள்  அபிராமி, ஆஷிகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதிகா, முத்தலகுறிச்சி ஊரா ட்சி உறுப்பினர் பிரான்சிஸ் மேரி, ஊராட்சி தலைவர் சிம்சன், முன்னாள் மாணவர் பேரவை தலைவர் ஜெஸ்டின் ஜெரோம், பிலிப்போஸ், எ.பி.எஸ்.ஆன்றோ, தக்கலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சி.சாரதா, குழித்துறை மறைமாவட்ட பள்ளி களின் கூட்டாண்மை மேலாளர் கலிஸ்டஸ் ஆகியோர் பேசினர். ஆசிரியை ரோஸ்லின் விஜயா நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஆசிரியை செலஸ்டின், மாணவர்கள் பெர்சியா, ஆன்றோ பிள சன்ட், அஸ்வினி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.