tamilnadu

img

10 மாத ஓய்வூதியம், கோவிட் கால உதவி வழங்க வேண்டும் ஆட்சியரிடம் தையல் கலைஞர்கள் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூன் 3- கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்தி லிருந்து தையல் கலைஞர் களுக்கு பத்து மாத நலவாரிய ஓய்வூதியமும், கோவிட் கால உதவியும் உடனே வழங்குமாறு தையல் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.  இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் புத னன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்த மனு வில் கூறப்பட்டுள்ளதாவது:  தமிழ்நாடு தையல் கலை ஞர்கள் நல வாரியத்தில் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர் கள் தங்களை பதிவு செய்துள்ள னர். இதில் சுமார் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவர்களாக உள்ளனர். அவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் வேறு வருமானமில்லாத வயது முதிர்ந்த ஏழை தையல் கலை ஞர்கள் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர்.  

இக்காலத்தில் கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு அறி விக்கப்பட்ட நிலையில் அவர்கள் மேலும் மிகவும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஓய்வூதியம் பெறும் தையல் கலை ஞர்களுக்கு வேறு எந்தவிதமான நிவாரண பொருட்களோ, நிவா ரண உதவிகளோ அரசால் வழங் கப்படவில்லை. எனவே மிகவும் சிரமப்பட்டு வரும் தையல் கலை ஞர்களுக்கு உடனடியாக 2019 ஆகஸ்ட் மாதம் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பணத்தை நிலுவைத்தொகையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏழை ஓய்வூதியர்கள் ஆன வயது முதிர்ந்த தொழி லாளர்களுக்கு கோவிட் 19 பேரி டர் கால நிவாரண பொருட்களும் நல உதவிகளும் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோசப், செய லாளர் சந்திரகலா, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மோகன், மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, எஸ்.அந்தோணி, ஜி.சந்திர போஸ், ஜாண் சௌந்தர் ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரி டம் அளித்தனர்.

;