tamilnadu

தொடர் பாலியல் குற்றவாளி காசியை 10 நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி மனு

நாகர்கோவில், ஜூன் 11- குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார் பெண் மருத்துவரை தொடர்ந்து பெண் என்ஜினீயர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் காசி மீது மற்றொரு வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் வடசேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது  மேலும் ஒரு கந்து வட்டி வழக்கும் அவர் மீது பதிவானது. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்ததால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டார். அவரை காவல் துறையினர் 2 முறை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காசி தன்னால் ஏமாற்றப் பட்ட பெண்கள் பற்றியும் அதற்கு உதவிய நண்பர்கள் பற்றிய விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காசியின் நண்பரான டைசன் ஜினோ என்பவரை காவல் துறை யினர் கைது செய்தனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் உள்ளார். அவரை பிடிக்க விமான நிலையங்களில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல பெண்கள் காசியால் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், இதில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காசியின் வழக்கை சிபிஐ வசம் ஒப்ப டைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.  இந்த நிலையில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் காசி வழக்கு தொடர்பான அனைத்து ஆவ ணங்களும் சிபிசிஐடி காவல் துறையி னரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் வழக்கு விசார ணையை தொடங்கினர். அதையொட்டி சிறையில் இருக்கும் காசி மற்றும் அவரது கூட்டாளியான டைசன் ஜினோ ஆகிய இருவரையும் 10 நாள் காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபி சிஐடி காவல் துறையினர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

;