நாகர்கோவில், செப்.2- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் கோதையாறு, மருதம்பாறை, சிற்றார், மைலார், மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளி யாறு உள்ளிட்ட 9 மண்டலங்களில், அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகள் கீரிப்பாறை, மைலார் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு 3000 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்க ளுக்கு இதுவரை 454 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை போக, மழைக்காலங்களில் சுமார் 60, 70 நாட்கள் வேலை இருப்பதில்லை. இதனால் ஆண்டிற்கு சுமார் 200 லிருந்து 210 நாட்கள் மட்டுமே இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இவர்களுக்கு அரசு வழங்கும் 454 ரூபாய் தினக்கூலியை கொண்டே இவர்கள் தங்கள் குடும்பத்திற் கான உணவு, மருத்துவம், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கவனிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு தினசரி ரூபாய் 600 சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ரப்பர் கழகத்தில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன்படி கடந்த 2016 டிசம்பர் முதல் சம்ப ளம் உயர்த்தப்பட வேண்டும் . இதற்காக தொழிற்சங்க பிரதிநிதிகள் , அதிகாரிகளை சந்தித்து பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர் . ஆனால் பேச்சுவார்த்தை யில் எந்த முடிவும் எட்டப்படவில்லை . இதை யடுத்து கடந்த 26 ஆம் தேதியும், 30 ஆம் தேதியும் நாகர்கோவிலில் நடந்த பேச்சு வார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசாணை 9/2019 மூலம் இறுதி ஊதியமாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும், இடைக்கால ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர கோரிக்கைகளை முழுமையாக பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி திங்கள் முதல் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் அரசு ரப்பர் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் ரப்பர் பால் வெட்டுதல், ஒட்டு ரப்பர் எடுத்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் வல்சகுமார் கூறுகையில், 2016 நவம்ப ருக்கு பிறகு ரப்பர் தோட்ட தொழிலாளர்க ளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 2016 டிசம்பர் முதல் ஊதிய உயர்வு அமல் படுத்த வேண்டிய நிலையில் 39 முறை அதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பள உயர்வு வழங்கப் படவில்லை. இதன்காரணமாக திங்கள் முதல் 9 ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக செவ்வாயன்று நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படும் வரை தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.