நாகர்கோவில், மே.26- குமரி மாவட்டத்தில் அனைவரும் ரேசன் பொருட்கள் பயன்படுத்துவதால் முழுமையான ஒதுக்கீடு ஒரே நேர த்தில் வழங்கப்பட வேண்டும் என கூட்டு றவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. பொது வினியோக திட்ட நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக முதல்வருக்கு கன்னி யாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சௌந்தர் ராஜ் அனுப்பியுள்ள மனு வில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் 19 தொற்றால் நாடு முழுவ தும் பெரிய இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். மக்களை நோய் தொற்றில் இருந்து மட்டுமல்லாது பட்டி னியிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
இதற்கு அரசு பொது வினியோக துறையை பயன்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பொது வினியோக திட்ட கட்டமைப்பு பலமாக உள்ளதால் ரேசன் கடைகள் மூலம் அரிசி உட்பட இலவச பொருட் கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இப்பணியை நமது ரேசன்கடை பணி யாளர்கள் சிறப்பாக செய்து வருகி றார்கள். கிட்டங்கியிலிருந்து பல நேரங்க ளில் இரவு நேரம் அரிசி வருவதாலும் இரவு நேரங்களில் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆபத்தான இக்கால கட்டத்தில் போது மான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இவர்கள் வேலை செய்து வருகிறார்கள். பெண்கள் வேலைபார்க்கும் அநேக கடைகளில் கழிவறை வசதிகள் கூட கிடையாது.
இந்நிலையில் ஒதுக்கீடுகள் சரியான முறையில் வழங்கப்படாததால் ரேசன்கடை ஊழியர்களுக்கு பொது மக்களிடையே அவப்பெயர் ஏற்படு கிறது. உதாரணமாக முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளுக்கு மத்திய அரசு கூடுதலாக வழங்கும் அரிசி 82 சத வீதம், சாதாரண ரேசன் அரிசி 94 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளதாக தகவல் தெரிகிறது. இதில் ஒதுக்கீடுகள் ஒரே சமயத்தில் செய்யா ததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே நேரத்தில் வழங்க இயலவில்லை. இவ்வாறு பொதுமக்களுக்கு முறை யாக அரிசி வழங்க முடியாத பழியை விற்பனையாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. எனவே குமரி மாவட்டத்தில் அனைவரும் ரேசன் பொருட்கள் பயன்படுத்துவதால் முழு மையான ஒதுக்கீடு ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
அதிகமான வேலைப்பளு உள்ளதால் அனைத்து கடைகளுக்கும் எடையாளர் தினக் கூலி அடிப்படையிலாவது நியமிக்கப் படவேண்டும். கிட்டங்கியிலிருந்து வழங்கப்படும் பொருட்கள் எடைகுறைவின்றி பாக்கெட் சிஸ்டம் முறையில் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படவேண்டும். அரசு ரேசன் கடை பணியாளர்களுக்கு நடைமுறை செலவினங்களுக்கு அறிவித்த தொகை அனைவருக்கும் கிடைப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும். குறிப்பாக மீனவர் கூட்டுறவு சங்க பணியாளர்க ளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.