tamilnadu

இ-பாஸ் நிராகரிப்பால் பரிதவிக்கும் மக்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி வழங்குக! ஏ.வி.பெல்லார்மின் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜுன் 13- சொந்த மாவட்டத்திற்குள் திரும்பி வர இ.பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் குமரி மாவட்ட மக்களுக்கு அனும திக்க வேண்டும். போதிய ஊழியர்களை / தன்னார்வலர்களை ஈடுபடுத்தி பரிசோ தனை செய்து அனுமதிக்க வேண்டும் என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ஏ.வி.பெல்லார்மின் கேட்டுக்கொண் டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ள தாவது: சென்னை உட்பட வெளியூர்க ளிலிருந்து சொந்த மாவட்டமான கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வர விரும்பும்  மாவட்டத்தின் மக்களுக்கு மாவட்டத்திற் குள் நுழைய அனுமதி மறுத்து மாவட்ட  நிர்வாகம் பெரும் சிரமத்தினை ஏற்ப டுத்தி வருகிறது. மரணம், திருமணம், மருத்துவ தேவை இருந்தால் மட்டுமே  மாவட்டத்திற்குள் வரலாம். மற்ற எவ ருக்கும் அனுமதி இல்லை என மாவட்ட  நிர்வாகம் எடுத்துள்ள நிலைப்பாட்டால் ஊர் திரும்பும் மக்கள் பெரும் சிர மத்துக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா பெரும்தொற்று அச்சு றுத்தும் சூழ்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களுக்கு சென்றவர்கள் ஊர் திரும்ப விரும்புவது இயல்பானது. அப்படி ஊர் திரும்ப விரும்புவோர் விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பங்கள் உடனடி யாக நிராகரிக்கப்படுகின்றன. வெளி யூர்களிலிருந்து வருபவர்கள் எல்லோரும் நோய் தொற்று உடையவர்கள் அல்ல. ஒரு சிலர் நோய் தொற்று களோடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதும் உண்மை. எனவே, மாவட்ட  எல்லையில் தேவையான ஊழி யர்களை/ தன்னார்வ செயற்பாட்டா ளர்களை நியமித்து நோய் தொற்றுள் ளோரை கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதும், மற்ற வர்களை பரிசோதனை முடிவுகளின் பின்  வீட்டு தனிமைக்குட்படுத்துவதும் சரியா னது. இதனை மாவட்ட நிர்வாகம் தற்போது செய்து வருகிறது. இப்பெ ரும் பணியில் தன்னலம் மறந்து இரவு  பகலாக பணியாற்றி வரும் மருத்துவ  பெருமக்கள், செவிலியர், இதர மருத்துவ உதவியாளர்கள், தூய்மை  பணியாளர்கள், அரசு அதிகாரிகள், ஊழி யர்கள், காவல்துறையினர் எல்லோ ரையும் மனதார பாராட்டுகிறோம். அதே  வேளையில், இப்பணிகளை மேலும்  விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட் டுள்ளது.

அதற்கான ஊழியர்கள், செயல்பாட்டாளர்கள் போதுமான அள வில் இல்லாத பட்சத்தில், கேரள அரசு செய்வது போல் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்பு களை விரிவாக இதில் பயன்படுத்த லாம். இப்பணிகளை அர்ப்பணிப்போடு செய்வதற்கு ஏராளமானோர் தயாராக உள்ளனர். மேலும் சிகிச்சையை விரிவு படுத்துவதற்கு மாவட்டத்திலுள்ள பொ ருத்தமான தனியார் மருத்துவமனை களையும் பயன்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்வதற்கு மாறாக  மாவட்டத்தின் மக்களையே மாவட்டத் துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்  என நிலைப்பாடு எடுப்பது பொருத்தமா னது அல்ல. இதனால் ஊர் திரும்புவ தற்கு மனுமேல் மனு போட்டு காத்தி ருக்கும் மக்கள் பெரும் மன உளைச் சலுக்கும், பதட்டத்திற்கும், வேத னைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி யாக இம்முடிவை மறுபரிசீலனை செய்து விண்ணப்பிக்கும் அனைவ ருக்கும் பாஸ் வழங்கிட நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என ஏ.வி. பெல்லார்மின் கேட்டுக்கொண்டுள்ளார்.

;