tamilnadu

img

3 மாத சம்பள நிலுவையை தர வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மே.17- மூன்று மாத சம்பள நிலுவையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொ லைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய மூன்று இடங்களில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்ப ந்த தொழிலாளர்கள் கண்களை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆட்கு றைப்பு, சம்பளம் குறைப்பு, சேவை பா திப்பு மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கும் அவுட் சோர்சிங்குக்கான டெண்டரை அமல்படுத்தாமல் ரத்து செய்ய வே ண்டும், விருப்ப ஓய்வுக்கு பின்னர் ஆள்  பற்றாக்குறை நிலவும் நேரத்தில்  ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கையை  குறைக்கக்கூடாது, பட்டினியால் வாடும்  நிலையில் உள்ள பிஎஸ்என்எல் ஊழி யர்களுக்கு நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் பி.ராஜூ தலைமை வகித்தார்.

ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வம், கிளை செய லாளர்கள் ராஜேஷ், தனபால், பிஎஸ்என்எல் ஊழியர் மாவட்ட தலை வர் ஜார்ஜ், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற  ஊழியர் சங்க நிர்வாகி மீனாட்சி சுந்தரம்  ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். தக்கலையில் நடைபெற்ற தர்ணா  போராட்டத்திற்கு, ஒப்பந்த தொழிலா ளர் சங்க கிளை செயலாளர் வினோத் தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் சுயம்புலிங்கம், நிர்வாகி சில்வான்ஸ்  ஆகியோர் பேசினர்.  குழித்துறையில், ஒப்பந்த தொழிலா ளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்  அனில் குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி கள் ராஜகோபால், வேலப்பன் ஆகி யோர் பேசினர்.

;