tamilnadu

கன்னியாகுமரி மாவட்டத்தில்   மார்ச் 31 வரை கடலில் மீன்பிடிக்க தடை

நாகர்கோவில், மார்ச் 24- கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மார்ச்  31 வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவ ட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த  நோய்த்தொற்றை தடுக்க எடுக்க வேண்டிய  தீவிர முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடி க்கைகள் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரையோர மீனவ மக்கள் வாழும் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலை தடுத்திடும் விதமாக 23 ஆம் தேதி முதல் முதல் 31 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் உட்பட அனைத்து மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களில் பொதுமக்கள் செல்வதும், ஏலம் எடுப்பதும் முற்றிலும் நிறுத்தப்படுகிறது. எனவே இக்காலங்களில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் மீன்பிடி துறை முகங்களுக்கு வருவதை தவிர்த்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

;