tamilnadu

நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

நாகர்கோவில், ஜுன் 3- குமரி மாவட்டத்தில் 69 நாட்களுக்கு பிறகு செவ்வாயன்று பேருந்துகள் இயக்கப்பட் டன. வடசேரியில் இருந்து நெல்லைக்கு 2 பேருந்துகளும், கிராமப்புற பகுதிகளுக்கு 30 சதவீத பேருந்துகளும் முதல்நாள் இயக் கப்பட்டன. நெல்லைக்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதேபோல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் செல்லும் பஸ்களிலும் கூடு தல் பயணிகள் பயணம் செய்தனர். இதனால் போக்கு வரத்து கழக அதிகாரிகள் புதனன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க நட வடிக்கை மேற்கொண்டனர். வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து புதனன்று காலை நெல்லைக்கு 12 பேருந்து கள் இயக்கப்பட்டன. தனிமனித இடைவெளி யுடன் பயணிகள் பயணம் செய்தனர். ஓட்டு நர், நடத்துநர் முக கவசம், கையுறை அணிந்தி ருந்தனர். திருச்செந்தூர், தென்காசி, தூத்துக் குடிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கன்னியாகுமரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.  குமரி மாவட்டத்தில் உள்ள 12 பணி மனைகளில் இருந்தும் புதனன்று காலை 225 பேருந்துகள் இயக்கப்பட்டன. போக்கு வரத்து கழக அதிகாரிகள் பேருந்து நிலை யங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசல் அதிக மாக உள்ள பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து களை இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். திருவனந்தபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட வில்லை. நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட் டன. முதல் நாளான செவ்வாயன்று ரூ.6 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. புதனன்று கூடுதல் பேருந்துகள் இயக்கி வருவதாகவும். பொது மக்கள் தேவைக் கேற்ப படிப்படியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.

;