tamilnadu

img

கேரளம், கர்நாடகத்தில் தேனீ பராமரிப்புக்கு அனுமதி மறுப்பால் வீணாகும் தேன் உற்பத்தி

நாகர்கோவில், மே 21- கேரளா மற்றும் கர்நாடகா வில் தேன் சேகரிப்போர் தேனீக் களை பராமரிக்க முடியாமல் ஊரடங்கால் அவதிப்பட்டு வரு கின்றனர். அந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதி பெற்றுத் தரு மாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:  கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 2500 நபர்கள் கேரளா மற் றும் கர்நாடக மாநிலத்தில் தேன் தொழில் செய்து வருகின்றனர். இதில் 15000 பணியாளர்கள் உள் ளனர்.

தற்போது கடந்த இரண்டு மாதங்களாக கேரளா சென்று தொழிலை பராமரிக்க முடியாத சூழ்நிலையில், அவர்கள் பெரும் இழப்பில் உள்ளனர்.  தற்போது மத்திய அரசு தேனீ வளர்ப்பு தொழில் மேம்பாட்டிற்காக ரூபாய் ஐநூறு கோடி ஒதுக்கியுள்ளதாக செய்தி வருகிறது. குமரி மாவட்ட தேனீ வளர்ப்போரை கண்டறிந்து கடன் வழங்க தக்க நடவடிக்கை எடுப்ப தோடு, கடன் வழங்குவதில் கூட்டு றவு சங்கங்களையும் இணைத்து செயல்படுத்த வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநி லங்களில் தேன் சேகரிக்கும் தொழில் செய்து வரும் இவர்கள் தனித் தனி பகுதியில் தனி வீடு களில் தங்கி இருந்து தொழில் செய்து வருகின்றனர்.

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா மற்றும் கர் நாடகா மாநிலத்திற்கு தேனீ பரா மரிப்பு தொழிலுக்கு இவர்களது சொந்த வாகனங்களில் குறைந் தது இரண்டு நபர் செல்லுவ தற்காக, அரசின் தனிமைப்படுத் தல் காலம் தனிமையாக இருந்த பின் வேலை செய்ய தயாராக உள்ளனர். எனவே அவர்களுக்கு தக்க அனுமதி கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மார்த்தாண்டம் தேனீ வளர்ப் போர் கூட்டுறவு சங்கத்தில் எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் மேலாளருடைய செல்வாக்கின் அடிப்படையில் தேன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படைதன்மையுடன் உறுப்பினர்களுக்கு தெரியப் படுத்தி நேர்மையுடன் கொள் முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனுவை, கன்னியா குமரி மாவட்ட தேன் சேகரிப்போர் சங்க செயலாளர் ஜூடஸ் குமார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.அந் தோணி, நிர்வாகி எஸ்.அருணா சசலம் ஆகியோர் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்தனர்.

;