tamilnadu

img

கொரோனா பாதிப்பு: சிபிஎம் சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கல்

நாகர்கோவில், ஜூன்  7- நாடு முழுவதும் கோவிட் 19 தொற்றை தடுக்கும் வகையில் சுமார் 3 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத னால் குமரி மாவட்டத்தில் ஆயி ரக்கணக்கான ஏழை குடும்பங்கள் வேலையிழப்பாலும், வருமானம் இன்றியும் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட இட துசாரி அமைப்புகள் வறுமையில் வாடும், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களை கடந்த இரண்டு மா தங்களுக்கும் மேலாக வழங்கி உதவி வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மார்த்தாண்டம் வட்டாரக் குழு  சார்பில் குழித்துறை பாலஸ் வார்டு  பகுதியில் கோவிட் 19 தொற்று தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை யால் வறுமையில் வாடும்  பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நி கழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மாத வன், வட்டாரக்குழு உறுப்பினர் மோகன் குமார், அப்புக்குட்டன் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழமணக்குடியில்  முகக் கவசம் கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), கீழமணக்குடி வள்ளம் உரிமை யாளர் சங்கம், ஒயிட் மெமோரியல்  ஹோமியோபதி மருத்துவக்கல் லூரி இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக ஆர்ஸ்.ஆல்ப் 30 மருந்து மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி கீழம ணக்குடியில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, மீன் தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர்  கே.அலெக்சாண்டர் தலைமை வகித்தார். இதில், 850 குடும்பங் களுக்கு ஆர்ஸ்.ஆல்ப் 30 மருந்துகளும், கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் 500 முக கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

ஆர்ஸ்.ஆல்ப் 30 மருந்து பயன்படுத்தும் முறை குறித்து மருத்துவக்கல்லூரி இயக்குநர் ரூபன் நத்தானியேல் விளக்கி பேசினார்.  இதில், மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, கன்னியாகுமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோசப், மருத்துவர் முருகன், மருத்து வக்கல்லூரி முதல்வர் ரிச்சர்ட் பிராங்கிளின், மருத்துவர் இம்மா னுவேல் ஷாரோன், மற்றும் பயிற்சி மருத்துவர்கள், பங்கு பணி யாளர், பங்குப்பேரவை நிர்வா கிகள், ஊர்மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

;