கடலூர், ஜூலை 18- கடலூர் ஒன்றியம் பச்சையங்கள் ஊராட்சி மனக்குப்பம் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கேட்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக் கப்பட்டது. இதில் கடலூர் ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியத் தலைவர் வைத்தி லிங்கம், ஒன்றியப் பொருளாளர் ஆர்.தமிழர சன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மீனாட்சி, சங்கர், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மனுக்கள் கொடுத்த 218 பேருக்கும் தொடர்ந்து வேலை வழங்கப்படும் என உறுதி யளித்தார்.