கடலூர், ஜன. 23- சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 142 வது பிறந்த தினத்தையொட்டி கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் அவரது படத்திற்கு கடலூர் மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது . அரசியலமைப்புச் சட் டத்தை பாதுகாக்கவும், மதவெறிக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஜி.மாதவன், இந்திய தேசிய காங்கிரஸ் அகில இந்திய வழக்கறிஞர் ஏ.எஸ் .ஏசந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி .ஆறுமுகம் ,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் ஜெ . ராமலிங்கம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் ஷேக் தாவூத், மாவட்டச் செயலா ளர் ஜாகிர் உசேன் ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளை ஞரணி செயலாளர் அருள்பாபு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இப்ரா ஹிம், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கடலூர் மக்க ளவைத் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், ஹபி புல்லா மண்டலச் செயலா ளர் ஜனாப், இஸ்கான் அலி, துணைச் செயலாளர் முக மது ஏஹயா, ஐக்கிய ஜமாத் கடலூர் நகர பொறுப்பாளர் அப்துல் வகாப், குடி யிருப்போர் சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் மருதவாணன், கிருத்துவ அமைப்புகளின் சார்பாக பாஸ்டர் சரவணன், ஞான கண் செல்லப்பா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் அமர் நாத், பால்கி, பக்கிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.