tamilnadu

img

கடலூரில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர், மே 17 - தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சூறாவளியாக மாறி பின்னர் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புயல் மே 18 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் வங்கக் கடலில் தொலைதூரத்தில் ஆம்பன் புயல் உருவாகி இருப்பதை எச்சரிக்கும் புயல் எச்சரிக்கைக் கூண்டு எண். 2 ஏற்றப்பட்டது. ஏற்கனவே, மீன்பிடித்  தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தூரப்பகுதிக்குச் சென்று மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

;