tamilnadu

மேலும் 9 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு

கடலூர், பிப். 29- கடலூர் மாவட்டத்தில் மேலும் 9 குடிநீர் விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்  கப்பட்டதைத் தொடர்ந்து குடி நீர் உற்பத்தி சங்கத்தினர்  போராட்டம் அறிவித்துள்ள னர். தமிழகம் முழுவதும் குடி நீர் விற்பனை செய்யும் நிறுவ னங்கள் உரிய அனுமதி யின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி  விற்பனை செய்து வருவதன் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனடிப்படையில் கட லூர் மாவட்டத்தில் உரிய நட வடிக்கை எடுத்திட மாவட்ட  ஆட்சியர் வெ.அன்புச்செல் வன் உத்தரவிட்டார். கடலூர் கோட்டத்திற்குட்பட்ட கட லூர், பண்ருட்டி, குறிஞ்சிப் பாடி வட்டங்களில் 19 குடி நீர் விற்பனை நிலையங்க ளுக்கு சீல் வைக்கப்பட்டது. இரண்டாவது நாளாக விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, சிதம்பரம், காட்டு மன்னார்கோயில் வட்டங்க ளில் உரிய அனுமதியில்லா மல் இயங்கி குடிநீர் நிறுவ னங்களை அந்தந்த வட் டாட்சியர்கள் சீல் வைத்தனர். அதன்படி மொத்தம் 9 நிறு வனங்களுக்கு சீல் வைக் கப்பட்டது. இந்நிலையில், தமிழ் நாடு அடைக்கப்பட்ட குடி நீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எம்.சுகுமாறன் தலைமை வகிக்க  மாநில துணைத் தலைவர்  கே.அம்பிகாபதி பங்கேற் றார்.  இக்கூட்டத்தில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிநீர்  விற்பனை செய்யும் நிறுவ னங்கள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவதென முடிவெடுத்த னர். தமிழகம் முழுவதும்  நடைபெறும் இப்போராட்டத்  தில் கடலூர் மாவட்டம் முழு மையாக பங்கேற்பதென முடிவெடுத்தனர். மாவட்டச் செயலாளர் எஸ்.குமார், நிர்வாகிகள் திட்டக்குடி செந்தில்குமார், விழுப்புரம் மதன், பண்ருட்டி  கார்த்திகேயன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.