கடலூர், ஆக.13- பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் பெயரையும் சேர்த்து அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளனர். உரிய விசாரணை செய்து கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 மூன்று தவணைகளாக வழங்கும் பிரதம மந்திரி யின் கிசான் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டிலி ருந்து மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. உண்மையான விவசாயிகளை பதிவேற்றம் செய்ய மாவட்ட, வட்டார அளவிலான வேளாண் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதற்காக அவர்களுக்கு ரகசிய குறியீட்டு எண் (பாஸ்வேர்ட்) வழங்கப்பட்டது. வேளாண் அதிகாரிகளுக்கு வழங்கிய வலைதள ரகசிய குறியீட்டு எண்ணை மோசடி பேர்வழிகள் திருடி, விவசாயி அல்லாத நபர்களை பயனாளிகளாக இந்த திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் தேதி இத்திட்டத்தில் 6ஆவது தவணை தொகையை மத்திய அரசு விடு வித்தது. மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் இரண்டு தவணைத் தொகை ரூ. 4,000 டெபாசிட் செய்யப்பட்டுள் ளது. தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மோசடி நடந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப் பட்ட 70 ஆயிரம் பேரில் 30 முதல் 40 ஆயிரம் வரை போலி நபர்களை சேர்க்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆட்சியர் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். காரைக்காடு ஊராட்சியில் பெரிய பிள்ளை யார் மேடு, பிள்ளையார் மேடு, கிராமத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்ததாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட வேளாண் அதிகாரி யின் ரகசிய குறியீட்டு எண் மூலம் மோசடியாக பயனாளிகளை சேர்த்திருப்பது விசாரணை யில் தெரியவந்துள்ளது. எனவே அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த மோசடி செயலுக்குப் பின்னால் உள்ள நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தில் கழிப்பறை கட்டும் திட்டம், சோலார் மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மோசடி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.