சிதம்பரம், ஜூன் 9- தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக் கும் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கோவை ரெங்கராஜன் தலைமை வகித்தார். சேலம் குமரேசன் முன்னிலை வகித்தார். கோவை மாரப்பன் வரவேற்றார். அனைத்து மாவட்டங்க ளிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சிச் செயலாளர் கலந்து கொண்டு பணியிடத்தில் உள்ள பணிசுமைகள் குறித்து கலந்துரையாடினர். ரெங்கராஜன் தலைமையில் செயல்பட்ட சங்கமும், குமரேசன் தலைமையிலான சங்க மும் மாநில அளவில் இணைந்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் என செயல் படுவது, ஒரு கோடிக்கு மேல் வருவாய் வரும் ஊராட்சிகளில் ஊராட்சி மேம்பாட்டு அலுவ லர் என்ற பணியிடத்தை உருவாக்கி 20 ஆண்டு கள் செம்மை யாக ஊராட்சி செயலாளர் பதவி வகித்தவர்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கப டும் இதர சலுகைகளும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். பணியிலிருந்து ஓய்வுபெரும் ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் நிறுவனத் தலைவராக ரெங்ராஜன், மாநில ஒருங்கிணைப்பாளராக குமரேசன், மாநிலத் தலைவராக மாறப்பன், மாநில பொதுச் செயலாளராக மணிராஜ், மாநில பொருளாளர் இமானு வேல்ராஜன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பெரிய சாமி, மாநில அமைப்புச் செயலாளர் (மக்கள் தொடர்பு) ஆதிமூலம், மாநில தலைமை நிலை யச் செயலாளர் தனசேகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.