tamilnadu

img

ஓமக்குளம் பகுதி மக்களுக்கு மாற்றுக் குடியிருப்பு கேட்டு மனு

சிதம்பரம், ஜுலை 5- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் மூசா தலைமையில் சிதம்பரம் சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர், வட்டாட்சி யர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் ஓமக்குளம் பகுதியில்  கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு  வசிக்கும் அனைவரும் தினக்கூலி தொழி லாளர்கள். அவர்கள் இருக்கும் இடத்தை காலி  செய்யவேண்டும் என்று நகராட்சி சார்பில்  நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களுக்கு நகரப் பகுதியிலேயே வசிக்க  மாற்றுக் குடியிருப்பு வழங்கிவிட்டு அவர்க ளது வீடுகளை காலி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி கள் இதுகுறித்து சம்பந்தபட்ட உயர் அதி காரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.