tamilnadu

வெற்றியை மாற்றி அறிவித்த அதிகாரிகள்

கடலூர், ஜன. 4- வெற்றியை மாற்றி அறிவித்தது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது குமளங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சி யில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி  தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி யில் ஜனவரி 2ஆம் தேதி துவங்கிய நிலை யில் 3ஆம் தேதி அதிகாலை எண்ணி முடிக்கப்  பட்டது. இதில், வெற்றி பெற்ற சின்னத்திற் கான வேட்பாளர் பெயருக்குப் பதிலாக இரண்டாவது இடம் பிடித்த வேட்பாளரின் பெயரை வெற்றி பெற்றதாக அறிவித்து அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட் டத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், வெற்றிப் பெற்ற சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில், படிவம் - 9இல் எந்த சின்னத்திற்கு யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததோ அவருக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்  கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட சான்றிதழை திரும்பப் பெறவோ, அதனை ரத்து செய்  யவோ, பதவியேற்பை நிறுத்தி வைக்கவோ  மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கிடை யாது. வேட்பாளர்கள் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும். இதுகுறித்து விரிவான விசா ரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதில்  அதிகாரிகள் மீது தவறு ஏற்பட்டிருக்கும் பட்சத்  தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு பரிந்து ரைப்போம் என்றார். மேலும், குறைந்த வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்றவர்கள் மறு வாக்கு  எண்ணிக்கைக் கோரி மனு அளித்து வரு கின்றனர். இதில், அந்தந்த பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார். இந்நிலையில்  அதிக வாக்குகள் பெற்ற வர் தரப்பில் குமளம் குளம் ஊராட்சி மன்றத் தலைவர்  பதவியை ஏற்றுக் கொள்வதற்கு  தடை விதிக்கக் கோரியும், மறு வாக்கு எண்ணிக்கை கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

;