கடலூர், ஜூலை 13- என்எல்சி நிறுவனத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகளில் உயிரிழந்த 20 தொழிலாளர்களுக்கு நெய்வேலி நகரத்தில் வீடுகள் தோறும் ஒளி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தின் 2ஆவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 3 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து களில் இதுவரை 20 தொழி லாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்துள்ளனர். நிறுவனத்தின் வளர்ச் சிக்காக இன்னுயிரை இழந்த அந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகை யில் நகரத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஒளி யேற்றி அஞ்சலி செலுத்தினர். அதேபோல் சி.ஐ.டி.யு. அலுவலகத்திலும் நிர்வாகி கள் ஒளியேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும், வர்த்தகர்களும், பொது மக்களும், நிறுவனத்தின் தொழிலாளர்களும் பங் கேற்றனர்.