tamilnadu

img

என்எல்சி, சிப்காட்டில் இளைஞர்களுக்கு வேலை வழங்குக வாலிபர் சங்கம் கோரிக்கை

கடலூர், அக்.12- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வேலை கேட்டு பேரணி-  பொதுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது. அரசு மற்றும் பொது த்துறை நிறுவனங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வாணையத்துறையில் வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும், கட லூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி, சிப்காட், ஐஎல்எப்எஸ் நிறுவனங்க ளில் உள்ளூர் இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளி ட்ட கோரிக்கைகளை வலியு றுத்தியும்,  குமார்-  ஆனந்த னின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்  கடலூர் புதுப்பாளையத்தில் பேரணி - பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர்.ஜி.லெனின் தலைமை தாங்கினார். நகரச் செய லாளர் டி.எஸ்.தமிழ்மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாவட்டச் செயலாளர் டி.குருஷ்ணன், பொருளாளர் ஆர்.கலைச்செல்வன், துணை த்தலைவர் ஜி.ஆழ்வார் உள்ளிட்ட பலர் பேசினர்.  முன்னதாக பெரியார் சிலையிலிருந்து கோரிக்கை பேரணி புறப்பட்டு பொதுக்கூட்டத்தை வந்தடைந்தது.