பலி அதிகரிப்பு
கடலூர் மாவட்டத்தில் கொரானாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 29 ஆம் தேதி 30 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 5 நாளில் 17ஆக அதிகரித்துள்ளது
புதுச்சேரியில் தொற்று 4,146
புதுவையில் புதிதாக 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,146 ஆக அதிகரித்துள்ளது.
ஆடு வளர்க்க நிதியுதவி
தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 10 பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வாங்க நிதியுதவி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள பயனாளிகள் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில், அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வரும் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
வாழை மரங்கள் நாசம்
புதுச்சேரியில் திங்களன்று மாலை வீசிய சூறைக்காற்றில், கூனிச்சம்பட்டு, திருக்கனூர், செட்டிப்பட்டு, சந்தைப் புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து
விழுந்து நாசமாகின.
கொள்ளை
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த காவலூர் பீமக்குளம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் பணியாற்றும் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜலகண்டீஸ்வரன் (எ) சரவணன், பூங்குளம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய இருவரையும் திங்கட்கிழமை இரவு மர்ம நபர்கள் மடக்கி விற்பனை செய்த பணம் 3 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி
திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கால் ஊனத்தால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி பரசு ராமனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக புதுப்பிக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள், அடையாள அட்டை, வருவாய்த் துறை
மூலமாக மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் பாய், தலையணை, போர்வை உள்ளிட்டவற்றை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். மேலும் அம்மா உணவகத்தில் அவரது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக உணவு சாப்பிடவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.