சிதம்பரம், பிப்.18- சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் பிப்.19ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதுகுறித்து அறக்கட்டளை செயலாளர் சம்பந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாட்டியாஞ்சலி விழாவில் 50 நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் 6 நாட்டிய நாடகங்கள், மோகினி ஆட்டம், கதக், குச்சுப்புடி, மணிப்பூரி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்க ளில் இருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர், ரஷ்யா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். வருகிற 2021ம் ஆண்டு 40ஆவது நாட்டியாஞ்சலி விழா விமர்சையாக 8 நாள்கள் நடைபெற உள்ளது. எதிர்காலத்தில் மாதந்தோறும் நாட்டியாஞ்சலி, இசை விழாக்கள் நடத்தப்பட உள்ளன’ என்றார். அறக்கட்டளை பொருளாளர் நடராஜன், அணிவணிகர் பழநி, டாக்டர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்