tamilnadu

img

பல்துறை சாதனையாளர்கள் கவுரவிப்பு

கடலூர், மே 13கடலூரில்,கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.பொதுமக்கள் மத்தியில் நடைபெற்ற இந்த விழாவில் கடலூர் நகரத்தைச் சேர்ந்ததனித்துவமான சாதனையாளர்களை, குறிப்பாக சமுதாயத்தின் நலனிற்காக உழைத்த பெருமக்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியானது,ஜூன் 9 ஆம் தேதியன்று ஒளிபரப்பப்பட உள்ளது. இதன்பாரம்பரியமான வியக்கவைக்கும் கோவில்கள், பிற வரலாற்று சிறப்புமிக்க அடையாளச் சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலையை நேர்த்தியாக சித்தரிக்கும் அமைவிடங்களுக்காக மக்களால் பிரபலமாக அறியப்படும் கடலூர் நகரின் முக்கிய ஆளுமைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்காக பள்ளியை நடத்தி வரும் வள்ளி, மன உறுதியுடன் போராடி 12 ஆம் வகுப்பை முடித்த இருளர் சமுகத்தை சேர்ந்த சங்கீதா, ஆதரவின்றி நிர்கதியாக கைவிடப்பட்ட 100-க்கும் அதிகமான முதியவர்களை சாலையோரங்களிலிருந்து மீட்ட ஜோஸ் மகேஷ் என்ற 30 வயது இளைஞர், சிறுமிகள் உள்பட 33 சிறார்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து துடிப்பான கால்பந்தாட்டக் குழுவாக மாற்றியுள்ள ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.