சிதம்பரம், பிப்.5- கடலூர் மாவட்டம், சி. தண்டேஸ்வரர் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள புறவழிச் சாலை மழையில் சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து சாலை சீர்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சாலையை தரமான முறையில் சீர் செய்யாததால், கருங்கல் துகள்கள் சாலையில் சிதறிக்கிடக்கிறது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் நிலைதடுமாகி கிழே விழும்போது பலத்த காயம் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறுகின்றனர். பொதுமக்கள் யாருக்காவது கை,கால் முறிவு ஏற்படுவதற்கு முன்பே சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.