கடலூர்,பிப்.29- ஆர்எஸ்எஸ், பாஜக சங்பரிவாரங்கள் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை கண்டித்து நெல்லிக்குப்பம் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஷேக்தா வூது தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் அஸ்ரப்அலி துவக்கி வைத்தார். தமுமுக நகரத் தலைவர் முஜிபுர் ரகு மான், மமக மாவட்டச் செயலாளர் தமிம்அன் சாரி, மாநில ஊடகப்பிரிவு பொருளாளர் பஜீல்முஜீப், திமுக நகரச் செயலாளர் மணி வண்ணன, காங்கிரஸ் நகர தலைவர் தில கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநி லக்குழு உறுப்பினர் கோ.மாதவன் பலர் கண்டன உரையாற்றினர்.