tamilnadu

எல்லைப் பிரச்சனையால் கரும்பு விவசாயிகள் பாதிப்பு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை பெற முடியவில்லை

கடலூர், ஜூன் 3- எல்லை விவகாரப் பிரச்சனையால்  கரும்பு விவசாயிகள் ரூ.50 லட்சம் வரையில் ஊக்கத் தொகையை பெற  முடியாமல் அவதிப்பட்டு வருகின்ற னர். கடலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மண் வளம், தண்ணீர் வளம்  காரணமாக விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய வட்டங்க ளில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பள வில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்  படும் கரும்புகள் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலைக்கும், சித்தூர் ஆரூ ரான் ஆலைக்கும் அரவைக்கு அனுப்பி வைக்கப்படும். பல்வேறு காரணங்களால் தற்போது இரண்டு ஆலைகளும்  மூடப்பட்டதோடு, விவசாயி களுக்கும் பல கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளனர். இதனைப் பெறுவதற்கு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும்  நிலையில் கரும்பு பயிர் சாகுபடியை  7,000 ஏக்கர் அளவிற்கு குறைத்துக் கொண்டனர்.

சாகுபடி செய்யப்பட்ட கரும்பை அண்டை மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப தமிழக அரசின் சர்க்கரை ஆணையாளரால் அனுமதி வழங் கப்பட்ட நிலையிலும் பல்வேறு கார ணங்களால் விவசாயிகள் அனு மதிக்கப்பட்ட ஆலைக்குப் பதிலாக வேறு ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வருகின்றனர். இதனால், தமிழக அரசு கரும்புக்கு வழங்கும் ஊக்கத்தொகை டன்னுக்கு ரூ.137.50 கிடைக்கவில்லை. இதன் காரணமாக கரும்பு சாகுபடி செய்துள்ள சுமார் 400 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ரூ.50 லட்சம் வரை விவசாயிகளுக்கு இழப்புப ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. ரவீந்திரன் கூறுகையில், கடலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் எந்தெந்த ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்ப வேண்டுமென கரும்பு சாகுபடி விவகார எல்லை  பிரித்து கொடுக்கப்பட்டு அதனடிப்ப டையில் மாற்று ஆலைகளுக்கு செல்லும் ஆணை வழங்கப்பட்டது.  

பிரிக்கப்பட்ட விவகார எல்லை முற்றி லும் விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாகவும், பயண தூரம் அதிகமாகவும் உள்ளது. இதனால் பல விவசாயிகள் அருகி லுள்ள ஆலைகளுக்கு இடைத்தரகர்  மூலமாக கரும்பினை அனுப்பி வரு கின்றனர். சுமார் 1.90 லட்சம் மெட்ரிக்  டன் கரும்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் கரும்புக்கான தொகையை 8 நாட்க ளில் விவசாயிகளுக்கு வழங்கிய தால் விவசாயிகள் சுய விருப்பத்தின்  பேரில் கரும்பை அனுப்பி வைத்தனர்.  அறுவடைசெய்து அனுப்பிய கரும்புக்கு அரசு அறிவித்த ஊக்க  தொகை டன் ஒன்றுக்கு ரூ.137.50 வரவில்லை என்று ஆலை நிர்வாகம் கூறுகிறது. இது விவசாயிகளை மிகவும் பாதிக்கும் செயலாகும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள் ளோம். எனவே, விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.50 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் என்றார்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாத்துக்கூடல் எஸ்.சக்திவேல் கூறுகையில், இப்பிரச்னைத் தொடர்பாக சர்க்கரை ஆணையாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு விருத்தாசலம் கோட்டத்தில் சாகுபடி  செய்யும் கரும்புகளை கிராமங்க ளின் அடிப்படையில் விவகார எல்லை நிர்ணயம் செய்து அனு மதிக்கப்பட்ட சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப வேண்டும். தவறி னால் ஊக்கத்தொகை வழங்க முடி யாது என்று தெரிவிக்கின்றனர்.  கரும்புக்கான தமிழக அரசின் ஊக்கத் தொகை கிடைக்காமல் விவ சாயிகள் மன உலைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர்.  எனவே, நிர்ணயிக்கப்பட்ட விவகார எல்லையை விவசாயி களின் விருப்பத்திற்கேற்ப மாற்றிய மைத்து அதற்கேற்ப டைவர்ஷன் ஆர்டர் வழங்கவும், இதுவரையில் ஆலைக்கு கொடுத்த கரும்புக்கான அரசின் ஊக்கத்தொகை  கிடைக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

;