tamilnadu

காவல் நிலையத்தில் கொள்ளை கும்பல் ஒப்படைப்பு

சிதம்பரம், பிப். 12- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இதில் காரில் வருபவர்கள் கீழ வீதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். இங்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடி களை உடைத்து, அதில் வைக்கப்பட்டி ருக்கும் பணம், நகை, லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை தொடர்ந்து திருடி வந்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகன்ங்களும் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து சிலர் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து திருட்டு நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் சீருடை அணியாமல் கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு சென்னையை சேர்ந்த சச்சிதானந்தம் என்பவர் கீழ வீதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த மர்ம நபர்கள் அவரின் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கொள்ளையர்கள் 2 பேரை மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட 2 பேரை சிதம்பரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;