கடலூர்,ஜன.29- கடலூர் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்கு நர் லலிதா அலுவல் காரணமாக கடலூரிலிருந்து விருத்தாச லம் சாலையில் ஸ்ரீமுஷ்ணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வடலூரிலிருந்து வேளாண் துறை உதவி இயக்குநர் ஷிப்ட் காரில் பார்த்த சாரதி என்பவர் கடலூர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த இரண்டு வாக னங்களும் கடலூரை அடுத்த அண்ணவல்லி அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நிலைதடுமாறிய பொலிரோ கார் சாலையில் கவிழ்ந்தது. அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது அரசு வாகனம் மோதியதில் வீரமுத்து என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். பலியான வீரமுத்து பெல் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு அடுத்த மாதம் வேலைக்கு செல்வதற்காக காத்திருந்தார். இதே விபத்தில் சுப்பிரமணியம், பால்ராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷிப்ட் காரை ஓட்டி வந்த பார்த்தசாரதியும் , கனிம வளத் துறை உதவி இயக்குநர் லலிதாவும் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல்துறை யினர் விசாரணை செய்து வருகின்றனர்.