tamilnadu

img

கொரோனா தனிமைப்படுத்தும் சுவரொட்டி ஒட்ட எதிர்ப்பு அரசு அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் வாக்குவாதம்

சிதம்பரம், ஜூன் 30- சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இரு வருக்கு கொரானா தொற்று  ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும் பத்தினர் மற்றும் கோவிலில் ஒன்றாக பணி செய்த தீட்சி தர்கள் உள்ளிட்டோரை தனி மைப்படுத்தும் நடவடிக்கை யில் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி ஆணை யளார் சுரேந்தர்ஷா உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அதன்படி தொடர்பில் இருந்த பிற தீட்சிதர்களின் வீட்டு சுவற்றில் தனிமைப் படுத்தப்பட்டதற்கான சுவ ரொட்டியை ஊழியர்கள் ஒட்டினர். இதற்கு தீட்சிதர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரி வித்து சில வீடுகளில் ஒட்டப்  பட்ட சுவரொட்டியை கிழித்து  வீசினர். கீழசன்னத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு  தெரிவித்தனர். இதனை யறிந்த அங்கு வந்த காவல்  துறை ஆய்வாளர் முருகேச னுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் மாவட்ட துணை  கண்காணிப்பாளர் கார்த்தி கேயன், வட்டாட்சியர் ஹரி தாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச்செயலாளர் ராஜா உள்ளிட்டோர் சமா தானம் பேசி தீட்சிதர்களை கலைந்து போகச் செய்தனர்.