tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி

கடலூர், மே. 5- கடலூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பணியாற்றி விட்டு கடலூர் மாவட்டத்திற்கு வந்த 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்துள்ளனர். அந்த தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா  வைரஸ் பரவலை தடுக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.அன்புசெல்வன் தலைமையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்  சம்பத் கூறுகையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 810 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே 4 ஆம் தேதி மட்டும் 129 நபர்களுக்கும், மே 5ஆம் தேதி மேலும் 68 நபர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வந்த 197 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 5 பேர் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 26 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 202 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்துள்ள 217 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.  

 தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயங்க முதலமைச்சர் தலைமையில் கூடிய கூட்டத்தில், தொழிற்சாலைகள் 40 சதம் வரை உற்பத்தி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் சமூக  இடைவெளியை கடைபிடித்து வேலை செய்ய வேண்டும். நிறுவனத்தை இயக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள குழுவை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம்,
இவ்வாறு அவர் கூறினார்

;