tamilnadu

img

பழிவாங்கும் என்எல்சியை கண்டித்து உண்ணாநிலை

கடலூர், மே 8-தொழிற்சங்க தலைவர்கள் மீது என்எல்சி நிர்வாகம் எடுத்து வரும் பழிவாங்கும் நடவடிக் கையை கண்டித்து சிஐடியு சார்பில் நெய்வேலி கியூ பாலம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் துவக்கி வைத்தார். நெய்வேலி சங்க பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், அலுவலக செயலாளர் ஜி.குப்புசாமி, பொருளாளர் சீனுவாசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் போராட் டத்தை முடித்து வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், நகரச் செயலாளர் ஆர்.பாலமுருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், நெய்வேலி சங்க முன்னாள் தலைவர்கள் வி.முத்துவேல், ஐ.சங்கிலிபாண்டியன் வாழ்த்திப் பேசினர்.

பிடிவாதம்...

சிஐடியு போராட்டம் அறிவித்ததிலிருந்து அதனை எப்படியாவது தடுக்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்பதில் என்எல்சி நிர்வாகம் குறியாக செயல்பட்டது. ஊதியமாற்று ஒப்பந்தத்தையே போராட்டம் இல்லாமல் பேச்சுவார்த்தையின் மூலம் முடித்தது சிஐடியு. ஆனால், சிஐடியு சங்கத் தலைவர் திருஅரசை வெளி மாநிலத்திற்கு மாற்றம் செய்து பிறப் பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறும் பிரச்சனையில் நிர்வாகம் பிடிவாதம் காட்டி வருகிறது.

தடையை மீறுவோம்!

இது தொழிலாளர் பிரச்சனைக்கான போராட்டம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டக்கூடாது என காவல் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் பேசி உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி பெற்றனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத என்எல்சி நிர்வாகம் போராட்டம் நடத்த 2017ஆம் ஆண்டு நீதிமன்றம் விதித்த தடையானை உள்ளதால் போராட்டம் நடத்தக்கூடாது என்று மே 7 ஆம் தேதி சிஐடியு சங்கத்திற்கு கடிதம் கொடுத்தனர். மீறி போராட்டம் நடத்தினால் பொருட்களை ஜப்தி செய்வோம் என்றனர். நாங்கள் தடையை மீறுவோம் என்று சிஐடியு தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இதனல், போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட இடத்திற்கு 8 ஆம் தேதி காலையிலேயே வந்த மாவட்ட காவல் கண்காணிப் பாளர், தேர்தல் நடத்தை விதி உள்ளது, நீதிமன்ற தடை உள்ளது மீறி நடைபெற் றால் கைது செய்வோம் என்று மிரட்டினார்.இதனால், காவல்துறை அதிகாரிகளுடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், சிஐடியு தலைவர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஏற்கெனவே அனுமதி பெற்றதால் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்தனர். வேறு வழியின்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

;