tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாடு கடலூரில் தியாகிகள் சுடர் பயணம்

நாமக்கல். ஜன. 20- சிஐடியு அகில இந்திய மாநாட் டிற்கு ஏந்தி செல்லும் சின்னியம் பாளையம் தியாகிகள் நினைவு ஜோதிப் பயணக்குழுவிற்கு நாமக் கல் மாவட்டத்தில் உற்சாக வர வேற்பளிக்கப்பட்டது.  பொதுத்துறை நிறுவனங் களை பாதுகாக்க வலியுறுத்தியும், தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக் கைகளை கண்டித்தும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் என் பதை உத்தரவாதப்படுத்த வேண் டும். குடியுரிமை சட்டத் திருத் தத்தை திரும்ப பெற வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கைகளை முன்னேடுக்க வலி யுறுத்தியும் எதிர்வரும் ஜன.23 முதல் 27 ஆம் தேதி வரை  சென்னை யில் சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டையொட்டி கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி பய ணம் சனியன்று மாநிலச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலை மையில் துவங்கியது. இப்பயணக் குழு நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக திங்க ளன்று நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தது. இப்பய ணக்குழுவிற்கு குமாரபாளையம், பள்ளிபாளையம், அக்ரகாரம், பள்ளிபாளையம் பேருந்து நிலை யம், வெப்படை உள்ளிட்ட பகுதிக ளில் உற்சாக வரவேற்பளிப்பட் டது. இதில் நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி, மாநில குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணி யன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.  முன்னதாக, குமாரபாளையத் தில் சிஐடியு மாவட்டகுழு உறுப்பி னர் கே.பாலுசாமி தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.இதில் சிஐடியு நிர்வாகிகள் வெங்கடே சன், சண்முகம், சரவணன், காளி யப்பன், மோகன் மற்றும் சிபிஎம் நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பள்ளிபாளையம் அக்ரஹாகாரம் பேருந்து நிறுத்தத் தில் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.முத்துகுமார் தலைமையில் வரவேற்பளிக்கப் பட்டது. இதில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் காசிவிஸ்வ நாதன், ராயப்பன், தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில்  மாவட்ட உதவிச் செயலாளர் கே.மோகன் தலைமை யில் வரவேற்பளிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் ஆர்.ரவி உள்ளிட் டோர் பங்கேற்றனர். வெப்படை பேருந்து நிலையத் தில் மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.தனபால் தலைமையில் வர வேற்பளிக்கப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாசலம்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;