tamilnadu

img

சிதம்பரம்- சென்னை இடையே குளிர் சாதன பேருந்து

சிதம்பரம்,நவ.23- சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு 2 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கும் நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.  கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சிதம்பரம் சார் ஆட்சியர் விசு மகாஜன், டிஎஸ்பி கார்த்திகேயன், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா,  அரசு போக்குவரத்து கழக மேலாளர் வெங்கடேசன், துணை மேலாளர்கள் சேகர்ராஜ்,முருகானந்தம், சுந்தரம் வணிக மேலாளர் பரிமளம், கிளை மேலாளர்கள் புவனேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.   இந்த பேருந்து சிதம்பரத்தில்  தினமும் காலை 6. 10 மணிக்கும்,  மதியம் 2 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் சென்னை செல்கிறது. பயணகட்டனம் ரூ.270, சாதாரண அரசு பேருந்தில் ரூ. 230,240 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.