tamilnadu

img

அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதி மாணணவிகள் போராட்டம்

சிதம்பரம், ஏப்.27-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில்500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதிக் கட்டணத்தை ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளது. இதனால் மாணவிகள் கட்டணத்தை கட்ட முடியாமல் தவிக்கின்றனர். மேலும் ஏழை எளிய மாணவிகளுக்கு அரசிடமிருந்து வழங்கும் உதவித்தொகையும் குறைவாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விடுதி கட்டணத்தை செலுத்தினால் தான் தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ‘தேர்வு நேரத்தில் திடீர் என்று கட்டணம் உயர்த்தினால் எங்களால் எப்படி கட்டணத்தை உடனே கட்ட முடியும். உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை ரத்து செய்து, தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்’ எனமாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வெள்ளியன்று இரவு மாணவிகள் உணவு சாப்பிடாமல் உயரத்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகளின் போராட்டத்தை ஒடுக்க நிர்வாகம் மின்விளக்குகளை அணைத்தது. ஆனால், மாணவிகள் செல்போன் விளக்குகளை எரியவைத்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன் கூறுகையில் ‘ மாணவர்களுக்கு அரசிடமிருந்து வந்த உதவித்தொகை போக மீதி பணத்தை கட்டவேண்டும் என கூறியுள்ளோம். இது திடீர் என்று உயர்த்திய கட்டணம் இல்லை’ என்றார்.

;