tamilnadu

கல்விக்கட்டணம் செலுத்த நிர்ப்பந்தித்தால் நடவடிக்கை கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர், ஆக. 1- கல்விக்கட்டணம் செலுத்த நிர்ப்பந்தம் செய் தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்  படும்  என்று கடலூர்  மாவட்ட  நிர்வாகம் எச்சரிக்கை விடுத்  துள்ளது. ஊரடங்கால் பொது மக்களின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ள தால் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு நெருக்கடி அளிக்கக் கூடாதென அர சும், நீதிமன்றமும் உத்தர விட்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தங்க ளது   பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு  2019-20ஆம்  கல்வியாண்டிற்கான நிலு வைக் கட்டணம், 2020-21ஆம்  கல்வியாண்டிற்கான கட்ட ணம் செலுத்த  வலியுறுத்தி கடிதம் அனுப்பி  வருகின்றன. இதுதொடர்பாக  மாவட்ட  ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்  சந்திரசேகர் சாக மூரி உத்தரவின்பேரில் கட லூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவல கத்திலிருந்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், பொதுமுடக்க காலத்தில், பள்ளி மாண வர்களிடம் 2019-20ஆம்  கல்வி யாண்டிற்கான நிலுவைக் கட்டணம், 2020-21ஆம்  ஆண்டிற்கான கல்விக்கட்ட ணம் ஆகியவற்றை செலுத்த  பெற்றோர்களை நிர்ப் பந்தம் செய்யக்கூடாது என்று  திட்டவட்டமாக மெட்ரிக்கு லேஷன் பள்ளி இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், கடலூர் மாவட்ட  ஆட்சியரிடமும் ஒரு சில  மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் நடத்த கல்விக்கட்டணம் செலுத்த  பெற்றோர்களை நிர்ப் பந்தப்படுத்துவதாக புகார் பெறப்பட்டுள்ளது. எனவே, அரசாணையினை மீறி  கல்விக் கட்டணம் செலுத்த  வற்புறுத்தும்  தனியார்  பள்ளிகள்  மீது  விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

;