tamilnadu

கடலூரில் 150 பேர் தடுப்புக் காவலில் கைது

கடலூர், ஜூலை 18- குற்றச் செயல்களில் தொடர்ந்து  ஈடுப்பட்டு  வருவோரையும், சமுதாயத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவோரையும் காவல் துறையினர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத் தின் கீழ் கைது செய்வது வழக்கம். அவ்வாறு கைது  செய்யப்படுபவர்கள்  ஓராண்டு வரையில் சிறையில்  அடைத்து  வைக்கப்படுவார்கள். மேலும், அவர்கள்  காவல்துறையின் தொடர் கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படுவார்கள். கடலூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளராக பொறுப் பேற்றுக் கொண்ட ஸ்ரீஅபிநவ் தனது  ஓராண்  டினை நிறைவு செய்துள்ள நிலையில் இது வரையில் 150 பேரை  குண்டர் தடுப்புக்காவல்  சட்டத்தின்  கீழ் கைது செய்திருப்பதாக காவல்  துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள் ளன. இதில், கொலை, கொள்ளை போன்ற  சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டு வந்த வர்களில் சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யர் என்ற  ராஜசேகர் (34), அந்தமானில் பதுங்கியிருந்த அவரது கூட்டாளி மன்சூர்அலி (36) உள்பட 62 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று  தொடர் வழிப்பறியில் ஈடுப்பட்டு  வந்தவர்கள் 21 பேர், கள்ளச்சாராயம் கடத்தல்  மற்றும் விற்பனை வழக்கில்  கைது  செய் யப்பட்டவர்கள் 38 பேர், லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தவர்கள் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மேலும், மணல் கடத்தலில் ஈடுப்பட்ட வர்கள் 12 பேர், பாலியல் பலாத்கார வழக்கு களில் சிக்கிய 8பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும்  விற்பனையில் ஈடுப்பட்ட வர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த  எண்ணிக்கை 150 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகப்படும் ஆட்களிடமிருந்து நன்னடத்தைக்கான  பிணையம் (109), வாடிக்கை  குற்றவாளிகளிடமிருந்து நன்ன டத்தைத்தான பிணையம் (110)  ஆகிய பிரிவு களில் 887 நபர்கள் மீது  வழக்குப்பதிவு செய்  யப்பட்டு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருவதாக  தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

;