tamilnadu

img

சத்துணவு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா? - டி.ஆர்.மேகநாதன்

ஒரு நாட்டில் மனிதவளம் சார்ந்த கல்வி  இல்லை என்றால் அந்நாட்டில் எத்தனை இயற்கை வளங்கள் இருந்தும் பயனற்றுப் போகும் என்பது தான் வரலாற்று உண்மை. இக்கருத்தின் அடிப்படையில் தான் குழந்தை பருவத்தி லிருந்தே சத்தான உணவு மற்றும் கல்வி  ஆகியவற்றுடன் சுகாதாரமான சூழ்நிலை யில் இளைஞர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பொருளா தாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பள்ளி குழந்தைகளுக்கு கல்வி  அளிப்பதோடு அவர்களிடையே காணப்ப டும் ஊட்டச்சத்து குறைவினை சரிசெய்து, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி மற்றும்  உயர்நிலை பள்ளிக் கல்வியை உத்தர வாதப்படுத்தி பள்ளி இடைநிற்றலை குறைத்து சமூகரீதியான சமத்துவத்தை ஊக்குவித்தல் போன்ற உன்னதமான நோக்கத்தோடு சத்துணவுத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

1982ஆம் ஆண்டு ஜூலை 1இல் அன்றைய முதலமைச்சராயிருந்த எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் ஆரம்ப காலத்தில் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பில் நடைபெற்று பின் 1983 பிப்ர வரி மாதம் முதல் இப்பணிக்கென்று சத்து ணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்கள் என ஊழியர்கள் நிய மனம் செய்யப்பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர்களுக்கு பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகள் இருப்பினும் திட்டம் பாது காக்கப்பட வேண்டும். திட்டத்தின் நோக்கம்  வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படை யில் திட்டத்தை செம்மையுடன் நடை முறைப்படுத்தினர். திட்டம் தொடர்ந்து நடை பெற்று வெற்றி பெற்றதால் ஆரம்ப மற்றும்  நடுநிலைப்பள்ளிகளுக்கு மட்டும் செயல் படுத்தப்பட்ட திட்டமானது மேலும் விரிவு படுத்தி உயர்நிலைப்பள்ளிகளுக்கும் அமல்  படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் இத்திட்டம் பற்றி  பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இன்றைய நிலையில் எந்த ஒரு ஆட்சியாள ராலும் புறக்கணிக்க முடியாத திட்டமாகி தேர்தல் காலங்களில் சத்துணவுத் திட்டத் தின் சிறப்புகளைக் கூறாத தேர்தல் பிரச்சா ரமே இல்லை எனக்கூறும் அளவுக்கு நாட்டின் மிகப்பெரும் திட்டமாகவும் நிரந்தர திட்டமாகவும் ஆகியுள்ளது.

ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் உணவு முறையில் முன்னேற்றமான பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த தன் காரணமாக ஆரம்பத்தில் வழங்கப்  பட்ட சாம்பார் உணவு என்பது முட்டையு டன் கூடிய சாம்பார் எனவும் பிறகு இதற்கு  மாற்றாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு  வகையான ருசியுடன் கூடிய 13 வகை யான கலவை சாதங்கள் மற்றும் 4 (நான்கு) வகையான முட்டை மசாலாக்கள் வழங்கப்  பட்டு சத்துணவு ஊழியர்களின் பணிச்சுமை யும் அதிகரித்து, சத்துணவு பணி என்பது  முழு நேரப்பணியாகியுள்ளது. ஆனால் அர சின் சத்துணவுத் திட்டத்தில் அரசின் நேரடி  கட்டுப்பாட்டில் கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய சத்துணவு ஊழி யர்கள் நிரந்தர முழு நேர அரசு ஊழியர்கள் என்று அரசு அறிவிக்காததும் அரசு ஊழி யர்களுக்கு உள்ள உரிமைகளையும் சலு கைகளையும் இதுநாள் வரை வழங்காத தும் வியப்பாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. இந்நிலையில் தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளான முழு நேர அரசு ஊழிய ராக அறிவித்து ஊதியக்குழுவால் வரை யறுக்கப்பட்ட ஊதிய விகிதம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய மாதாந்திர ஓய்வூதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு  முன் வைத்து ஜனநாயக ரீதியான முறை யீட்டு இயக்கங்கள் மற்றும் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். போராட்டக் காலங்களில் சங்க தலைமையை அரசு  அழைத்துப் பேசும் போது உங்கள் கோரிக்  கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதப்படுத்தி பேசுவதும்,  சட்டமன்ற கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்துணவு ஊழியர்கள் சம்பந்தமான கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி கேள்விகள் எழுப்பிடும் போதும், அரசின் பரிசீலனையில் உள்ளது என்று துறை அமைச்சர் பதில் கூறுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு  மனிதனும் கௌரவமான வேலையும், வேலைக்கேற்ற ஊதியமும் எதிர்பார்ப்ப தில் தவறு ஏதும் இல்லை. குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்ற வர்கள் முதல் பட்ட மேற்படிப்பு வரை  படித்தவர்கள் வேலையில்லா திண்டாட்டத் தின் விளைவாக குறைந்த சம்பளம் என்றா லும் அரசு வேலை என்பதால் என்றாவது ஒருநாள் நம்மையும் அரசு ஊழியராக அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பணிக்கு சேர்ந்தனர். இன்றைய சூழ்நிலையில் விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வால் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு சந்தையில் மதிப்பில்லை. இதனால் அன்றாட அத்தியாவசியச் செலவுகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட  செலவுகளை எதிர்கொள்ள முடியாத  சூழ்நிலையில் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ள னர். இந்நிலையில் அன்றாட வாழ்வாதார மும் எதிர்கால வாழ்வாதாரமும் உத்தரவாத மில்லாத நிலை என்பது தொடர்கிறது.

இந்நிலை மாறிட பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்ற சத்துணவு அமைப்பா ளருக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதிய விகிதமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியமும் நிர்ணயம் செய்து, வயது மூப்பின் காரணமாக பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வமான மாதாந்திர ஓய்வூ தியம் வழங்கியும் ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்திட அரசு முன்வர வேண்டும். நாட்டில் என்ற ஒரு தனி நபரும் பொருளா தார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பின்தங்கியவராக இருக்கக்கூடாது என்ற இலக்கை நோக்கியதாகத்தான் அரசின் பயணம் இருக்க வேண்டும். அதுதான் ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதார ரீதி யான முன்னேற்றத்திற்கும் அடிப்படை யான அம்சமாக இருக்கும்.

சென்னையில் உள்ள எம்.எஸ்.சுவாமி நாதன் அறக்கட்டளையும் ஐ.நா.வில் உள்ள  உலக உணவு திட்டமும் கடந்த காலத்தில் வெளியிட்ட அறிக்கையில் வறுமைக்கு காரணம் குறைந்த ஊதிய விகிதமே என  குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வேலை செய்வதற்கு திறமையும், தகுதியும் உள்ள அனைவருக்கும் வேலை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான ஊதியத்தையும், உரிமை களையும் வழங்குவதோடு அவர்கள் பணி ஓய்வு பெற்றபின் அவர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க முறையான ஓய்வூ தியம் வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது. இந்நிலையில் சத்துணவு ஊழி யர்களின் எதிர்பார்ப்பு அரசுக்கு சாதாரண மானது. குறைவானது. ஆனால் அதே நேரத்தில் மிக மிக நியாயமானதும் கூட. மேலும் இதில் பணியாற்றும் ஊழியர் களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் பெண்களே. அதிலும் விதவைகள், கண வனால் கைவிடப்பட்டவர்கள், வறு மைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே. இதனையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு சத்துணவு ஊழியர்களின் நீண்ட  கால கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது சுமார் 2 லட்சம் ஊழியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாது காக்கப்படும் என்பது உத்தரவாதப் படுத்தப்படும்.

கட்டுரையாளர் : முன்னாள் மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்