tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப். 13- மாநகராட்சி, நகராட்சி பகுதி களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மூன்று வாரத்தில் தமிழக தேர்தல் ஆணை யம் பதிலளிக்க உத்தவிட்டு வழக்கை மூன்று வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளை ஒத்தி வைத்தது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில்,” உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை.  தேர்  தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங் களுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. நீதி மன்றத்தில் அளித்த வாக்குறுதி யின் அடிப்படையில் டிசம்பர் 9-ஆம் தேதி ஊரக  உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே  வெளியிடப்பட்டது. 

ஆனால் மாநகராட்சி, நகராட்சி களுக்கான உள்ளாட்சித் தேர்  தல் அறிவிப்பு வெளியிடப்பட வில்லை.  மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்  பவை மாநகராட்சி, நகராட்சி களே. பொது சுகாதாரம், தண்ணீர்,  சாலை, கட்டட பாதுகாப்பு போன்ற  அடிப்படை வசதிகள் பொதுமக்க ளுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.  ஆகவே, மாநகராட்சி, நகராட்சி களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கோரி மனு அளித்தும்  நடவடிக்கை இல்லை. ஆகவே, 15  நாட்களுக்குள்ளாக மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” எனக் கூறி யுள்ளார்.

இந்த வழக்கை வியாழனன்று (பிப்.13)  நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  “இந்தியத் தேர்தல்  ஆணையம் தற்போது வரை திருத்  தம் செய்யப்பட்ட இறுதி வாக்கா ளர் பட்டியலை வெளியிட வில்லை, வாக்காளர் பட்டியல் வெளியிட்டால் தான் தேர்தல் அறி விக்க முடியும்” எனக் கூறினார்.  இதையடுத்து மனுதாரர் தரப்  பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து இது போன்ற கார ணங்கள் தான் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து மாநக ராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணை யம் மூன்று வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;