tamilnadu

img

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் காத்திருப்பு போராட்டம் வெற்றி

பேச்சுவார்த்தைக்கான  ஏற்பாடு செய்ய அரசு ஒப்புதல்

சென்னை,மார்ச் 11-  நியாயமான ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற தொடர்ந்து ஒற்றுமையுடன் செயல்பட தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் நடராஜன் (தொமுச),கே.ஆறுமுகநயினார் (சிஐடியு) ஆறுமுகம் (ஏஐடியுசி), சுப்பிர மணியம் பிள்ளை (எச்.எம்.எஸ்) வெங்கடேசன் (எம்எல்எப்) பத்மநாபன் (பணி யாளர் சம்மேளனம்), வேலு (ஏஏஎல்எப்) செல்வராஜ் (திக) ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை வருமாறு:

 ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தக்கோரி மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற பின்னர் அரசு பேச்சுவார்த்தைக்கான நாளை அறி வித்தது. நமது போராட்டத்திற்கு கிடைத்த  வெற்றியாக இருந்தாலும் தொழிற்சங்கங் களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சை யாக அறிவித்தது தவறு என சுட்டிக்காண்பித்த தோடு எந்த சங்கங்களோடு அரசு பேச்சு வார்த்தை நடத்தப்போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை தொட ர்வது என கூட்டமைப்பு முடிவு செய்தது. அதனடிப்படையில் புதன்கிழமையும் (மார்ச் 11)  காத்திருப்பு போராட்டம் மிகவும் சக்தியாக நடைபெற்றது. 

பேச்சுவார்த்தை  

போக்குவரத்து செயலாளர் மாலை 3 மணிக்கு  பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூட்டமைப்பு சங்கங்களை அழைத்தார். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையாக நடைபெற வேண்டும். பெயரளவிற்கான சங்கங்களை வைத்து பேச்சுவார்த்தை என்ற  பெயரில் தொழிலாளர்களை சென்ற முறை  வஞ்சித்தது போல் இம்முறை வஞ்சிக்கக் கூடாது. பேச்சுவார்த்தைக்கு வர தகுதி யான சங்கங்களை இறுதிப்படுத்த வேண்டும். அதற்கென குறைந்தபட்ச கோட்பாடு உரு  வாக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.  நமது வாதங்களின் நியாயம் சரியானது என ஒப்புக்கொண்ட போக்குவரத்து செயலா ளர் இது சம்பந்தமாக ஆலோசித்து முடிவு எடுப்பதாகக் கூறியுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட கழகங்களில் செயல்படக்கூடிய சங்கங்களை அழைப்பது சம்பந்தமாக விவா தித்து முடிவு எடுப்பதாக ஒப்புக்கொண்டுள் ளார். 

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

பேச்சுவார்த்தையை துவங்க வேண் டும். பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் சங்கங் களை இறுதிப்படுத்த வேண்டும் என்ற நமது  கோரிக்கையை அரசு பரிசீலிக்க ஒப்புக்கொ ண்டது. இது, தமிழகம் முழுவதும் பல்லா யிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு டன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத் திற்கு கிடைத்த வெற்றியாகும். 

ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்

நாம் முன்வைத்த கோரிக்கையின் அவ சியத்தை அரசு ஒப்புக் கொண்ட நிலையில் நமது காத்திருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என கூட்டமைப்பு சங்கங்கள் முடிவு செய்துள்ளன.  எனவே காத்திருப்பு போராட்டத்தை நாம் முடித்துக் கொள்கிறோம். அரசு நம்மிடம் ஒப்புக் கொண்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை யில் கலந்து கொள்ளும் சங்கங்களை முறைப் படுத்தி இப்போது கடைபிடித்த ஒற்றுமையை தொடர்ந்து கடைப்பிடித்து நியாயமான ஒப்பந்தத்தை உருவாக்குவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 

;