tamilnadu

img

சிஏஏவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம்

மதுரை,மார்ச் 18-  மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடி மக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராகவும் அதனை திரும்பப்பெறக்கோரியும் புதனன்று தமிழகம் முழுவ தும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டங்கள் நடைபெற்றன.

சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி மற்றும் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தியிருந்த போராட்டக்கா ரர்கள், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முழக்கங்களும் எழுப்பினர்.சென்னை உயர் நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தேசியக் கொடி மற்றும் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தியிருந்த போராட்டக்கா ரர்கள், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முழக்கங்களும் எழுப்பினர்.

மதுரை தெற்குவாசலில் நடைபெற்ற போராட்டத்தில் 3 ஆயிரம் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடை பெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிஏஏவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இராமநாதபுரம், கடலூர், அரியலூர், தென்காசி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்ற இந்த சிறை நிரப்பும் போராட்டங்களில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

;