tamilnadu

img

ராஜஸ்தான் நிலைமை ஆறுதல் அளிப்பதாக இல்லை

கொரோனா உயிரிழப்புக ளின் எண்ணிக்கை ராஜஸ்தானில் குறைவாக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிக ரித்து விடாதபடி சமாளித்துக் கொண்டு இருக்கிறது மாநில அரசு. ஆனால், மாநிலம் திரும் பிய புலம் பெயர் தொழிலாளர்கள் ஏதாவது வேலை, வருமானம், வாழ்வாதாரத்தை தேடி அலைவ தால் கிராமப்புறங்களில் தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ராஜஸ்தான் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆனால், கோவிட்19 க்கு பலியா னோர் எண்ணிக்கை 500 க்கும் குறைவாகவே உள்ளது. மற்ற வட இந்திய- வடகிழக்கு மாநி லங்களுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தானில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. பக்கத்து மாநிலங்களை விட பரிசோதனை களின் எண்ணிக்கையும் அதிக மாக உள்ளது.

மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், பரத்பூர், பாலி மற்றும் உதயப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங் கள் மட்டுமே 60 சதவிகிதம் பங்கு  வகிக்கின்றன. நல்வாய்ப்பாக, தொழில் நகரான பில்வாராவில் மார்ச் தொடக்கத்தில் தொற்று பர வல் ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தி லேயே தனிமைப்படுத்தல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி விட்டது. இந்த ஒரு மாவட்டத்தோடு அரசின் வெற்றிகரமான அனுபவம் நின்று போய்விட்டது. ஜெய்ப்பூரிலும், ஜோத்பூரிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள் ளது.

எச்சரிக்கை உணர்வுடனான அணுகுமுறை

தினமும் பத்து லட்சம் பேருக்கு பத்தாயிரம் பேர் என்ற விகிதத்தில்  பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.  (குஜராத்-5006:ம.பி- 3830:உ.பி-2682). ஜுன் 26 வரை 379 பேர்உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தா னில் கோவிட் 19 மரண விகிதம் 2.33சதவீதம் எனக்குறைவாகவே உள்ளது. (குஜராத் 5.99%; ம.பி. 4.28%). எனினும், அசோக் கெலாட் அரசு எச்சரிக்கையாக உள்ளது. மக்கள்  அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிக ளுக்கு அனுமதியில்லை.மற்ற மாநி லங்களில் வழிபாட்டுத் தலங்களை திறந்து வைக்க அனுமதித்து போல ராஜஸ்தான் வழிபாட்டுத் தலங் களை திறக்க அனுமதிக்கவில்லை. தொழில் நிறுவனங்கள்,  பொதுப்போக்குவரத்து, பொது இடங்களில் மேற்கொள்ள வேண் டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள்- விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு 

கட்டுப்பாட்டு மண்டலங்களில் எவ்விதத் தளர்வுகளும் கிடையாது. கொள்ளைநோய் அவசரச் சட்டம், 2020 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 ன்படி, முகக் கவசம்  அணியாமை, தனிமனித இடைவெ ளியைப் பின்பற்றாமை, பொது இடங்களில் எச்சில் துப்புதல்- மது பானங்கள் அருந்துதல் ஆகியவை சிறைத்தண்டனை அளிக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமையான விழிப்புணர்வு பிரச்சாரம் ஜுன் மாதம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு பிரச் சாரம் 11 ஆயிரத்து 500 கிராம ஊராட்சிகளில் நடத்தப்பட்டது.இது போன்ற பிரச்சாரம் வைரஸ் தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே நடத்தி இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவு கிறது. சொந்த ஊர்களுக்கு  திரும்பியுள்ள புலம்பெயர் தொழி லாளர்களால் தொற்றுப் பரவல் அதிகரிக்க கூடும் என்ற கவலை  உள்ளது. மிதமானது முதல் தீவி ரமான காய்ச்சல் அறிகுறி உள்ள வர்கள் உடனடியாக அரசு  மருத்து வமனைகளை அணுக வேண்டு மென்று அரசு கூறினாலும், மாநி லத்தில் பல மாவட்ட அரசு மருத்து வமனைகளில் கூட அடிப்படை யான மருத்துவ வசதிகள் இல்லை.

வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய நாசமும், அரசின் பாராமுகமும்

வெட்டுக்கிளிகளின் படையெ டுப்பு கொரோனா காலத்தை மேலும் மோசமாக்கிவிட்டது. அகில இந்தியத் விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சஞ்சய் மாதோ விவசாயிகளின் நிலை பற்றிக் கூறுகையில்,”வெட்டுக் கிளிகள் பேரழிவை ஏற்படுத்திவிட்டது. ராபி (அக்-மார்ச்), கரீப்(ஜீலை-அக்) பயிர்கள் நாசமாகிவிட்டன. விவசாயிகள் சொல்லொண்ணாத் துயரத்தில் உள்ளனர். ஆனால், மாநில அரசோ விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடு வதற்கான சர்வேயைக்கூட இன் னும் தொடங்கவில்லை.வெட்டுக்கி ளிகள் ஏற்படுத்திய நாசம் போக எஞ்சிய பயிர்களை அறுவடை செய்த விவசாயிகள் அதை மோச மான விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மின்கட்டண பில் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. இந்நிலையில், அவர்களால் எவ் வாறு மின் கட்டணம் செலுத்த முடியும்? ஆறு மாதங்களுக்கு  விவசாய பயன்பாட்டுக்கான மற் றும் வீடுகளுக்கான மின் கட்ட ணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.

நாட்டிலேயே, ராஜஸ்தானில் தான் மிக அதிகமாக 18 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ள னர். அவர்களுக்கு உடனடியாக வேலை தேவை. பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் வழங்கப்படும் ரூ.6000ஐ  8ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதித் திட்டத் தில் குடும்பத்திற்கு 200 நாட்கள் வேலை வழங்கி, ஊதியம் ரூ.600 ஆக அதிகரிக்க வேண்டும்”  என்கி றார்.

ஃப்ரண்ட்லைன் (ஜூலை 17,2020) இதழில் 
 டி.கே.ராஜலட்சுமி கட்டுரையிலிருந்து
தொகுப்பு : ம. கதிரேசன்