tamilnadu

img

சட்டப்பேரவை கூட்டம் இன்றோடு நிறைவு

சென்னை, மார்ச் 23- கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமி ழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடை கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி  வருவதால், நாடு முழுவதும் பல்வேறு சுகாதார நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. கொரோனா அச்சம் காரண மாக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், சட்டமன்ற கூட்டத் தொடர் தொடர்ந்து நடை பெற்றால்தான் மக்கள் அச்ச உணர்வின்றி இருப்பார்கள் என்றும், மக்களுக்கு தகவல்கள் சென்றடையும் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். பிறகு நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடரை முன்கூட்டியே மார்ச் 31 ஆம் தேதியே முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனை, மார்ச் 21  அன்று பேரவைத் தலைவர் ப.தனபால் பேரவையில் அறி வித்தார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே கூட்டத்தொடரை நிறைவு  செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியு றுத்தின. சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை புறக்கணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அறிவித்தன. இதனையடுத்து, சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு திங்க ளன்று (மார்ச் 23) காலை 1.15 மணிக்கு மீண்டும் கூடியது.  இதனை பேரவையில் அறிவித்தனர். பிறகு, அந்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவு குறித்து பேரவைத் தலைவர் தனபால்  அறிவிப்பு வெளியிட்டார்.  கொரோனா தடுப்பு நடவடிக்கை களுக்காக மார்ச் 31 ஆம் தேதி வரைக்கும் அறிவிக்கப்பட்டி ருந்த மானியக் கோரிக்கை அனைத்தும் மார்ச் 24 அன்றே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும் அன்றைய தினமே அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்தார்.

27 துறை 15 அமைச்சர்கள்...

பேரவைத் தலைவரின் இந்த அறிப்பால் காவல்துறை, தீ  அணைப்பு, நிதி, பொதுத்துறை, வீட்டு வதி, வருவாய், சுகாதா ரம், வேளாண்மை, தொழில், தகவல் தொழில் நுட்பம், போக்கு வரத்து, ஆதிராவிடர், பழங்குடியினர், சுற்றுலா, வணிக வரி கள், பத்திரப்பதிவு,பால் வளம்,  தொழிலாளர் மற்றும் வேலை  வாய்ப்பு, தமிழ் வளர்ச்சி, கதர் கிராமத் தொழில் வாரியம், இந்து  சமய அறநிலையத்துறைகள், சிறு-குறு, நடுத்தர உள்ளிட்ட 27 துறைகளும் ஒரே நாளில் தாக்கல் செய்து 15 அமைச்சர்க ளின் பதிலுரையும் இடம் பெறுகிறது.
 

;