எம்.ஜெயசீலன் சாடல்
கரூர், மார்ச் 13 - சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கரூர் மாவட்டம், குளித்தலை ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு, தோழமை அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் குளித்தலை பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜூம்ஆ பள்ளிவாசல் முத்த வல்லி கே.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெய சீலன் பேசியதாவது:
ஹிட்லர் கொள்கையும், ஆர்எஸ்எஸ் தலைமையைக் கொண்டு செயல்படும் பாஜக கொள்கையும் ஒன்று தான். ஒரே கொடி, ஒரே மொழி, ஒரே நாடு ஆகியவை ஹிட்லரின் கொள்கையாகும். அதே கொள்கையை ஆர்எஸ்எஸ், பாஜக செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றி, மக்களை பதற்றத் துடன் வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகும்.
1935 ஆம் ஆண்டு ஹிட்லர் கொடுமை யான சட்டத்தை நிறைவேற்றி யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும் அழித்தார். அதே போல தற்போதைய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து ஏழை, எளிய, நடுத்தர சாமானிய மக்களும், தலித் மலைவாழ் மக்கள், இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் தங்களுக்கு எதிரானவர்கள் என அனைவரும் இந்த சட்டத்தால் கடு மையாக பாதிக்கப்படுவார்கள். மக் களை அழிப்பதற்கு இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார் மோடி. இந்த சட்டத்தால் 55 சதவீத மக்கள் பாதிக்கப் படுவார்கள். ஹிட்லர் பாதையும் ஆர்எஸ்எஸ் பாதையும் ஒன்று தான். அந்த பாதையில்தான் மோடி பயணம் செய்கிறார்.
இஸ்லாமிய இன்று தெருவில் இறங்கி போராடும் பெண்கள் எவ்வளவு அடக்குமுறைகள் வந்தாலும், அதனை எதிர்த்து நின்று இந்த மக்கள் விரோத சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தில் தொடர்ந்து ஈடு படுவார்கள். இந்த கருப்பு சட்டத்தை இயற்றியவர்கள் கண்டிப்பாக மக்க ளால் குப்பைத் தொட்டியில் வீசப்படு வார்கள். அனைத்துப் பகுதி மக்களு க்கும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படு வார்கள். தொடர்ந்து தெருவில் இறங்கி போராட்டத்தை நடத்தி அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். மாவட்டக் குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன், காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, திருச்சி மாநகர ஜமாத் உலமா சபை செயலாளர் சிராஜ்தீன் ஹஜ்ரத் உள்ளிட்டோர் பேசினார். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.