tamilnadu

img

கல்லா கட்டுவதிலும், ஊழல் செய்வதிலும் கவனம் செலுத்தும் எடப்பாடி அரசு

கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திண்டுக்கல், ஆக.24 கல்லாக்கட்டுவதிலும் ஊழல் செய்வதிலுமே எடப்பாடி பழனிசாமி அரசு கவனம் செலுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் திங்க ளன்று செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:  மத்தியில் ஆளும் மோடி அரசும் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனி சாமி அரசும் மக்கள் விரோதக் கொள் கைகளை நாளுக்கு நாள் தீவிரமாக அமுல்படுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சி கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதற்கு மாறாக வரு கிற செப்.13ம் தேதி நீட் தேர்வை  நடத்த மோடி அரசு முடிவெடுத்துள் ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி களும் போராட்டங்கள் நடத்தி  வலி யுறுத்தியும் விதிவிலக்கு கொடுக்கா மல் மத்திய பாஜக அரசு அமுலாக்க முயற்சிக்கிறது. இந்த நீட் தேர்வு அடித்தட்டு மக்களின் மருத்துவக் கல்வி உரிமையை பறித்து வருகிறது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியுள் ளோம். இந்த கொரானா நெருக்கடி காலத்தில் கூட நீட் தேர்வை நடத்து வதன் மூலம் மத்திய பாஜக அரசு மாணவர்களின் உயிரோடு விளையாடு கிறது. 

இன்னொரு புறம் மோடி அரசு  இந்தியை வேகமாக திணித்து வரு கிறது. விமான நிலையத்தில் நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இந்தி தெரியாவிட்டால் நீங்கள் இந்தி யரா என்று ஒரு அதிகாரி கேள்வி எழுப்பு கிறார். ஆயுஷ் பயிற்சி மையத்தில் ஆங் கிலம் மற்றும் இந்தி என இரு மொழியில் பேசுவதற்கு பதிலாக நான் இந்தியில் தான் பேசுவேன், இந்தி தெரி யாதவர்கள்  வெளியேறுங்கள் என்று அதன் செயலாளர் ஆணவமாக பேசுகிறார். அந்த அளவிற்கு இந்தி மொழி வேகமாக திணிக்கப்படுகிறது.   அதோடு புதிய கல்விக்கொள்கை திணிப்பது, பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என மத்திய பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 

தமிழகத்தில் அதிமுக அரசு  கொரோனா தொற்று பற்றியோ,  மக்களைப் பற்றியோ கவலைப்படா மல் கல்லாகட்டுவதில் குறியாக உள் ளது. நோய் தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வாங்குவதில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. மத்திய- மாநில அரசுகளின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை களைக் கண்டித்து ஆக.25,26 தேதி களில் 10 ஆயிரம் மையங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ள னர். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். (நநி)

;